காஞ்சிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்க்கதிர்பூர் பகுதிக்கு சென்ற போது பிரதமர் மோடியையும், பாஜக நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக-வினர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வீட்டை முற்றுகையிட முயன்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.