கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- இருவர் பலி  

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- இருவர் பலி   

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் தமது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் சென்னை நோக்கி சென்றுள்ளார். காரானது,மாதேப்பள்ளி என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தாறுமாறாக ஓடி, தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அனில்குமார் மனைவி ரம்யா,அவரது மகள் அகான்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.