கார் உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து: வானை முட்டும் அளவுக்கு புகை வெளியேறியதால் பரபரப்பு...

சென்னை அம்பத்தூர் அருகே கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் வானை முட்டும் அளவுக்கு புகை வெளியேறியதால் பரப்பரப்பு நிலவியது.

கார் உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து:  வானை  முட்டும் அளவுக்கு புகை வெளியேறியதால் பரபரப்பு...

அம்பத்தூர் அடுத்த மண்ணூர் பேட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை  திடீரென குடோனில் இருந்து தீ பற்றி மளமள வென குடோன் முழுவதும் பரவியது.இதனால் வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ கட்டுக்கு அடங்காமல் எரிந்து வருகிறது. 

மேலும் இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாகின. விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தொழிற்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.