தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்கலாமா?

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை  வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை  வழங்கலாமா?

அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்த  தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, இந்திய பார் கவுன்சில் அங்கிகாரம் இல்லாமல்  தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை,  வரும் 13 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.