கேபிள் டி.வி. கட்டணமும் உயர்கிறது.. அதிர்ச்சியில் நடுத்தர வர்க்கம்...

இன்று டிசம்பர் 1ம் தேதி முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்கிறது என்பதை நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கேபிள் டி.வி. கட்டணமும் உயர்கிறது.. அதிர்ச்சியில் நடுத்தர வர்க்கம்...

உள்ளூர் தொலைக்காட்சி முதல் சர்வதேச சேனல்கள் வரை கையில் இருக்கும் ரிமோட் மூலமே காணலாம். சில வீடுகளில் நேரடி இணைப்பு DISH இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் பலரும் கேபிள் நிறுவனங்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் பல முக்கிய சேனல்கள், தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், இன்று முதல் கேபிள், ‘டிவி’ கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்களுக்கு மாறும் முறை, 2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைப்படி வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை, ர்வு செய்து கொள்ளலாம். ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ஆக குறைக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு, சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளன. சில சேனல்கள் முக்கிய சேனல்களின் தொகுப்பில் இருந்து மாற்ற உள்ளனர். அவ்வாறு மாற்றும் போது, மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலால் நடுத்தரவர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.