26-ம் தேதி கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்.. ஆறுமுகசாமி ஆணையம் குறித்து விவாதிக்கப்படலாம்..!

பரந்தூர் புதிய விமான நிலையம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல்..!

26-ம் தேதி கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்.. ஆறுமுகசாமி ஆணையம் குறித்து விவாதிக்கப்படலாம்..!

26-ம் தேதி கூடும் அமைச்சரவைக் கூட்டம்:

சென்னை தலைமை செயலகத்தில் வரும் 26 ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை:

அதுமட்டுமின்றி, அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல்:

குறிப்பாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், புதிய தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளதோடு, பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லை ரம்மி தடை சட்டம்:

மேலும் பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.