முக்கிய ஒப்புதல் குறித்து ஆலோசனை!!.. வரும் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

முக்கிய ஒப்புதல் குறித்து ஆலோசனை!!.. வரும் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

2022-23 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், பட்ஜெட்டை தயார் செய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் அவற்றுக்கான சங்க பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண்மைத் துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அற்விக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்டவை குறித்தும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.