முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய கொள்கை முடிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய கொள்கை முடிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தகவல்!!

முதல்வர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி, மேகதாது அணை விவகாரம், அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் மற்றும் நிறைவு விழாக்களை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் மற்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை மற்றும் அரசின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திமுக அரசு அமைந்த பிறகு நடைபெறும் 6-வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்..