
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது கொண்ட மாறாத அன்பால் அவருடைய பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடி வருவதாக நினைவு கூர்ந்துள்ளார்.
குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இளம் சிறார்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.