காஞ்சிபுரத்தில் இரண்டு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வைரல்!!

காஞ்சிபுரத்தில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரத்தில் இரண்டு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வைரல்!!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை.. பட்டுசேலை வாங்கவும் கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் இருந்து காந்தி சாலை தேரடி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த இருவரும் அருகில் இருந்த பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோன்று, ஆறுமுகம் என்பவர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காஞ்சிபுரம் வந்தார். அவரை அழைத்துச் செல்ல அவரது மனைவி இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பொழுது மாநகராட்சி அலுவலகம் அருகே சாலையில் இருந்த புதைவடிகால் இணைப்பு பள்ளத்தை தவிர்ப்பதற்காக வலது பக்கமாக தனது இரு சக்கர வாகனத்தை சற்று வளைத்து சென்றபோது ன்னால் அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரண்டு சிசிடிவி காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com