மேம்பால விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த நபரரின் சிசிடிவி...!

ஆம்பூரில் மேம்பாலம் விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த நபர்லேசான காயங்களுடன், உயிர் தப்பினார். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேம்பால விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த நபரரின் சிசிடிவி...!
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய  நெடுஞ்சாலையில் ரூ.143 கோடி  மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும்  பணிகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது. அதற்கான பணிகள்  மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில், ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம்  நெடுஞ்சாலை துறையினர் கால்வாய் அமைக்க  5 அடிக்கும் மேல்  பள்ளம் தோண்டியுள்ளனர்.

இந்நிலையில் அப்பள்ளத்தில் வங்கி மற்றும் BSNL தொலைதொடர்புகளுக்கு தேவையான கேபிள்  இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள உள்ளதால், கேபிள் இணைப்புகளை மீண்டும்  இணைக்காததால் நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை  மூடாமல் வைத்துள்ளனர்.

இதில், இன்று மாலை ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நிலை தடுமாறி சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்  தவறி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டனர். லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த  தேனீர் கடையின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

மேலும்  நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் பள்ளங்கள் தோண்டினால் அதற்கு முன்பாக தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com