கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை..!

கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை..!

விசா முறைகேடு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மற்றும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய வீட்டில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக சீன நாட்டினர் 250 பேருக்கு பணம் வாங்கி கொண்டு விசா வாங்கி தந்து முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கூறி சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 17 ஆம் தேதி கார்த்திக் சிதம்பரத்திற்கு தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இந்த சோதனையானது நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்திக் சிதம்பரம் வீட்டில் நடைபெற்றது. சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு பீரோவுக்கு சாவி இல்லாததால் பூட்டை திறக்க முடியாமல் அதற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டனில் இருக்கும் கார்த்திக் சிதம்பரத்திடம் அந்த பீரோவுக்கான சாவியை பெற்று, அந்த பூட்டை திறந்து சோதனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து வந்த 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த விசா முறைக்கேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 7 பேர் கொண்ட சிபிஐ குழு வந்து சோதனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.