சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்... சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை...

சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாக பேச பயன்படுத்திய இ.மெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர்.
சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்... சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை...
Published on
Updated on
1 min read
கேளம்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய சுஷில் ஹரி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.திடீரென சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.உடல்நிலை தேறியவுடன் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தது.
குறிப்பாக பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.அங்குள்ள பெண்டிரைவ்,ஹார்டிஸ்க் போன்றவற்றை கைப்பற்றினர். அதுமட்டுமின்றி பள்ளி மாணவிகளை பள்ளியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.அங்கும் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப்  ஆகியவற்றை சோதனை செய்த போது  இ_மெயில் வழியாக மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது.சில பெண்களுடன் ஆபாசமாக இருந்து கொண்டு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரங்களையும் சிபிசிஐடி கைப்பற்றினர்.
ஆபாசமாக மாணவிகளுடன்  உரையாட பயன்படுத்திய யாஹூ இ-மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கினர்.
இதனையடுத்து சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.போதுமான ஒத்துழைப்பை வழங்கியதாகவும்,ஆதார்ங்கள் திரட்டியுள்ளதாகவும்,அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com