இடைத்தேர்தல்: தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக...யார் யார் தெரியுமா?

இடைத்தேர்தல்: தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக...யார் யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவரோ அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

திமுகவுக்கு சவாலாக அமையும் இடைத்தேர்தல் :

இதனால் அரசியல் களம் முழுவதுமே தற்போது  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் சூடு பிடித்துள்ளது. ஏனென்றால், ஆளும் கட்சிக்கு இந்த தேர்தலானது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. காரணம் இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ஜெயிக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு கடந்த இரண்டாண்டு ஆட்சிக்கு ஒரு அவப்பெயராக அமையும் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மும்முரம் காட்டி வருகின்றனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி :

இந்த காரணங்களால், கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கே இந்தமுறையும் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கி திமுக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.

தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக :

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்காக 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, நாசர், சக்கரபாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com