கிராம பால் கூட்டுறவு கட்டிடமாக மாறிய பேருந்து நிறுத்தம்.. மீட்டுத்தர பொதுமக்கள் கோரிக்கை...

போளூர் அருகே வெண்மணியில் செயல்பட்டு வந்த பேருந்து நீழற்கூடம் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க கட்டிடமாக மாறிய அதிசயம்

கிராம பால் கூட்டுறவு கட்டிடமாக மாறிய பேருந்து நிறுத்தம்.. மீட்டுத்தர பொதுமக்கள் கோரிக்கை...

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இருந்து சேத்துப்பட்டு வழியாக, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்மணி கிராமத்தில் சிவன் கோயில் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்கூடம் செயல்பட்டு வந்த நிலையில், இப்பகுதியில் தனியார் கல்விக்கூடம் மற்றும் தனியார் சமையல் கலை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பல கிராமப்புற பகுதிகளில் இருந்து பயிற்சி மையத்திற்கும் கல்வி கூட்டத்திற்கும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளில் வரும் மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை.

தற்போது கொரோனா ஊரடங்கால் அங்கு யாரும் வரவில்லை என்பதால், இனிமேலும் இதே நிலை நீடிக்கும் என முடிவு செய்த ஊராட்சி நிர்வாகம், வெண்மணி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் என நிழற்கூடத்தில் எழுதியுள்ளார்.

இதனால் அரசு நகர பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சிற்றுந்துகள் என எவ்வித பேருந்துகளும் நின்று செல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர், மேலும் நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளவில்லை, ஏன்  என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழையின் காரணமாக ஒதுங்கும் இடமாகவும் கிராம பால் கூட்டுறவு
கட்டிடமாக மாறிய அதிசயத்தை இதுவரை நெடுஞ்சாலைத்துறை கண்டுக்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.