மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்!

மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்!

பேருந்து கட்டண சலுகை, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளமாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்:

சென்னை ராணிமேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய அவர், பெண்கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரிக் கல்லூரி திகழ்வதாக புகழாரம் சூட்டினார். ராணி மேரிக் கல்லூரியை இடிக்க அப்போதைய அதிமுக அரசு முனைந்ததாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை எதிர்த்து மாணவிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். பெண் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகவும், பேருந்து கட்டண சலுகை, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

உறுதியளித்த ஸ்டாலின்:

தொடர்ந்து பேசிய அவர், மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் படி, ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது உறுதியளித்தார்.