நாளை பட்ஜெட் தாக்கல்... தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?!!

நாளை பட்ஜெட் தாக்கல்... தேர்தல் அறிக்கை திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் 2023- 2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல்:

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  அந்த வகையில், பரபரப்பான  அரசியல் சூழ்நிலையில்  2023- 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.  நிதித்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா்.  தொடா்ந்து அவா் பட்ஜெட் உரையை சுமாா் 2 மணி நேரம் வாசிப்பாா் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தீர்மானம்:

அதனை தொடா்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.  அதில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. மேலும் வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அதில் தீர்மானிக்கப்படும்.  

ஆயிரம் ரூபாய்:

இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உாிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.  மேலும் விளையாட்டுத்துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் அறிக்கை:

மேலும், உலக நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வலுவான இணைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதுமட்டுமின்றி, தி.மு. க-வின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் சில அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

 எதிர்க்கட்சிகள்:

அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொது வெளியில் எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் சூழ்நிலையில், சட்டசபையில் அந்த குற்றச்சாட்டுகளை நேருக்கு நேராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் உரை:

மேலும் முதலமைச்சர் வடஇந்திய விவகாரம், குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து சிறப்புரை ஆற்றுவாா் என தொிகிறது.  எனவே இந்த சட்டசபை கூட்டத் தொடர் பரபரப்புடன் நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

வேளாண் பட்ஜெட்:

தொடா்ந்து நாளை மறுநாள் வேளாண் குறித்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதில் வேளாண்துறை சம்பந்தமாக பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க:   தாய்மை பெண்கள் அடையும் உச்ச நிலை...!!!