பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்.!!

நெல்லையில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்.!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பேரூராட்சி 9-வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அகமது காதர் என்பவர், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இன்று பேரூராட்சி கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொண்டார். தன்னுடைய வெற்றியைக் கொண்டாடும் வகையில் அகமது காதர் இன்று திமுகவை சேர்ந்த தனது நண்பர் ராகவன், பொன் கனகராஜ்  உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுக்கு நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வைத்து விருந்து வைத்துள்ளார்.

அங்கு அனைவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகி விபிஆர்.விஜயன் தனது ஆதரவாளர்களுடன் சென்று அகமது காதர் தரப்பினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் விபிஆர்.விஜயன் தரப்பினர் பிரியாணி தட்டை எடுத்து ராகவன், பொன் கனகராஜ் மீது ஓங்கி அறைந்த்தாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்து அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் அருகிலிருந்த கவுன்சிலர் அகமது காதருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து கவுன்சிலர் அகமது காதர் கூறுகையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான விபிஆர்.விஜயனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளரான ராகவன் பொன் கனகராஜூக்கும் இடையே நீண்ட நாளாக முன்விரதம் இருந்து வந்தது என்னையும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடக் கூடாது என விஜயன் தரப்பினர் மிரட்டினர். ஆனாலும் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.