பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் சீரமைக்கப்படும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

டிசம்பர் மாத  இறுத்திக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து , நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்கான மருந்துகள் வழங்கப்படும்.

பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் சீரமைக்கப்படும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மைய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணமான  ஹெபாஃபில்ட்டரை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சிறிய இடத்தில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது அனைத்து நவீன வசதிகளும் கொண்டுள்ள மருத்துவமனையாக மாறியுள்ளது.

எனவே இந்த மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் வகையில் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக தெரிவித்தார். மேலும்  தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியும் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை  நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்தார்.

நாளை சென்னையில் உள்ள இரயில் நிலையங்களில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு  என்ன மாதிரியான பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.  

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்தவரை 11 லட்சம் அளவிற்கு உள்ளது என்றும், 2 அல்லது 3 நாட்களுக்கு இவை பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறினார்

நம் மாநிலத்தின் தேவை 12 கோடி தடுப்பூசி, அதில் 2 கோடி அளவிற்கு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 9 கோடி தடுப்பூசி கிடைக்க வேண்டும். அதேபோல் இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க உள்ளதாகவும் அவை கிடைத்தால் இந்த மாதம் இறுதிக்குள் 3 கோடி அளவிற்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற எண்ணிக்கையை அடைய முடியும் என்றார்.

மேலும் தமிழகத்தில் 60 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி களையும் செலுத்தி கொண்டதாக கூறிய அவர்,  கடந்த ஆட்சியில் பேருந்து நிலையங்களில் தாய் பாலூட்டும் அறைகள் திறக்கபப்ட்டது, ஆனால் அங்கு  போதிய வசதிகள் இல்லை, ஒரு மின் விசிறி கூட இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் தாய் பாலூட்டும் அறையை அந்த  துறை சார்ந்த அமைச்சரிடம் கூறி சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

டிசம்பர் இறுத்திக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து , நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்கான மருந்துகள் வழங்கப்படும். மேலும் சைதாபேட்டையில் உள்ள பேருந்து நிலையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தாய் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.