காலை சிற்றுண்டி திட்டம் : வாழும் காமராஜர் முதல்வர் என புகழாராம்

காலை சிற்றுண்டி திட்டம் : வாழும் காமராஜர் முதல்வர் என புகழாராம்

காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்ததன் மூலம் வாழும் "காமராஜர் முக ஸ்டாலின்"என்று முதலமைச்சரை நாடு பாராட்டுகிறது- தலைமை கொறடா கோ.வி.செழியன்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் பொதுவாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது

மேலும் படிக்க | ராகுல் காந்தி பதவி நீக்கம் - விமானநிலையம் முற்றுகை போராட்டம்


இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் மற்றும் வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு!

அரசு தலைமை கொறடா கோ.வி செழியன்:

பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்தவர் முதலமைச்சர் அதனால் தான் "வாழும் காமராஜர் முக ஸ்டாலின்" என்று நாடு பாராட்டுகிறது என பேசினார்