வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம், 3 சவரன் நகை திருட்டு......சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம், 3 சவரன் நகையை திருடி சென்ற இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம், 3 சவரன் நகை திருட்டு......சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது..
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வடக்கு ஆண்டியப்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டின் அருகே, புதிதாக கட்டப்பட்டு வரும் மற்றொரு வீட்டில் இரவு  தூங்கியள்ளனர். இவரது மகன் ராஜேந்திரன், வீட்டின் அருகே உள்ள நாடக மேடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் நடந்து சென்ற ராஜாளிப்பட்டி, காலணியை சேர்ந்த கவியரசனை, அழைத்து இந்த ஏரியாவில் உனக்கு என்ன வேலை என விசாரித்துள்ளனர். அதற்கு கவியரசன் நாடகம் பார்க்க குமரபட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற ராஜேந்திரன், வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த  ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம், 3 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சந்தேகமடைந்த வர் சற்றுமுன் நாடகம் பார்க்க செல்வதாக கூறிச்சென்ற கவியரசனை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து கேட்டபோது தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விராலிமலை  போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட மூவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com