
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்துகொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பது தொடர்கதையாகி வருகிறது இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ரயில்வே காவல்துறையினர் பலமுறை அறிவுரை வழங்கியம் தொடர்ந்து ஆபத்தை உணராமல் சிறுவர்கள் செயல்பட்டு வருகின்றனர்
சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து இரு ரயில் பாதைகளிலும் நாளொன்றுக்கு சுமார் 120 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில் செல்கிறது.
இந்நிலையில் சிறுவர்கள் புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், ரயில் பாதையில் காவலர்களை ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்