தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்.!!

தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும்  நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்.!!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த 10 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 4 லட்சம் பேர் தகுதியானவர்களாக இருக்கும் நிலையில் நேற்று வரையும் 95 ஆயிரம்  பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும், இந்த மாதம் இறுதிக்குள் அது 10.7 பட்சமாக மாற உள்ளது.

இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியான முன்கள் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழக அரசு சார்பில் இனி வரும் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும்  உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்ட 600 இடங்களில் சிறப்பு முகாமும், சென்னையில் மட்டும் 160 இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது