ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நிறைவு !!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நிறைவு - 2 மடங்கு காளைகள், மாடுபிடி வீரர்கள் விண்ணப்பம்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நிறைவு !!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிகட்டு போட்டிக்கான முன்பதிவு செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், 2 மடங்கு அதிகமான வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரனோ பரவல் காரணமாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நேற்று மாலை 5 மணியுடன் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், 4 ஆயிரத்து 534 காளைகள் மற்றும் ஆயிரத்து 999 மாடு பிடி வீரர்கள் என மொத்தம் 6ஆயிரத்து 533 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில் 2 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.