கடல் சீற்றத்தால் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் காத்திருக்கும் மீன்பிடி படகுகள்; வெறிச்சோடி காணப்படும் கடல்!

வேதாரண்யத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடலில் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடல் சீற்றத்தால் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் காத்திருக்கும் மீன்பிடி படகுகள்; வெறிச்சோடி காணப்படும் கடல்!

நாகை மாவட்டம்  வேதாரண்யம்  பகுதியில் காற்று அதிகமாக வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள பகுதியில் காற்று பலமாக வீசுவதாலும்,  மீன்கள் கிடைக்கவில்லை எனவும், காற்று தணிந்த பிறகு  மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது