ஸ்டாஃப் ரூமில், டேபிள்களுக்கு அடியில் பாலியல் தொந்தரவு.....பேராசிரியர் மீது மாணவிகள் புகார்...

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், மேக்கப் போட்டுட்டு ஏன் வரவில்லை என துன்புறுத்தியும் உள்ளதாக பேராசிரியர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

ஸ்டாஃப் ரூமில், டேபிள்களுக்கு அடியில் பாலியல் தொந்தரவு.....பேராசிரியர் மீது மாணவிகள் புகார்...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த புகாரில் பால் சந்திரமோகன், பாடம் நடத்தும்போது மாணவிகளுடன் நெருக்கமாக அமர்ந்து கொண்டு பாடம் எடுப்பதை போன்று பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது,டேபிள்களுக்கு அடியில் மாணவிகளின் கால்களுக்கு இடையே இவரது காலை விட்டு சேட்டை செய்வது, மாணவிகளிடம் ஆபாசமாக இரட்டை அர்த்த ஜோக்குகளை கூறி சிரிப்பது, ஸ்டாஃப் அறைக்கு வர சொல்லி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவது போன்ற பாலியல் குற்றங்களை செய்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். 

ஸ்டாஃப் அறைக்கு வர சொல்லி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவது, காலேஜ்க்கு வரும்போது போது நல்லா அழகா மேக்கப் போட்டுட்டு வர தெரியாதா? என் வீட்டு வேலைக்காரி கூட சும்மா பவுடர் எல்லாம் போட்டுக்கிட்டு ஜம்முனு இருப்பா, நீயும் இருக்கியே? என திட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.