மதுரை, செல்லூர் பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை திறக்கப்பட்டது. 5 பைசா கொண்டு வரும் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் விளம்பரம் செய்திருந்தார்.
இந்நிலையில், புதிய பிரியாணி கடை முன்பு பழைய 5 பைசா நாணயங்களுடன் ஏராளமானோர் குவிந்தனர். பழைய 5 பைசா நாணயங்கள் கொண்டு வந்த நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
கடை உரிமையாளர் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்ததால், சுமார் 500 பேருக்கு பிரியாணி வழங்கியவுடன் கடையின் ஷட்டரை மூடினார். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் திரண்டதால் கொரோனா விதிமுறைகள் காற்றி பறக்கவிடப்பட்டன.