
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு எதிராக மீண்டும் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தந்ததாக வேண்டுமென்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி திருப்பு அனுப்பினார். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அன்றைய காலங்களில் ஆளுநர் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார், அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறிய அவர், ஆனால், தற்போது வேறு சில காரணங்களை சொல்லி அவசர சட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதாகவும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும், அதுதான் சட்டம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.