
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில், சிறுவன் ஒருவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவகோட்டையில் வசித்து வந்த தேவி என்பவரது 4 வயது சிறுவன் நேற்று இரவு 10 மணிக்கு தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று, வேகமாக வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது.
இந்த விபத்தில் சிறுவன் பரிதாமாக உயிரிழந்த நிலையில், அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.