பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது - அமைச்சர் சர்ச்சை பேச்சு

நம்மை விட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது, ஆனால் 4 ஆயிரம் பேர் நம்முடைய பொன்மலை ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவருகிறார்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசிய பேச்சு சர்சையை கிளப்பியுள்ளது.

பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது - அமைச்சர் சர்ச்சை பேச்சு

நம்மை விட பீகார்காரர்களுக்கு மூளை கிடையாது, ஆனால்  4 ஆயிரம் பேர் நம்முடைய பொன்மலை ஒர்க்ஷாப்பில் வேலை செய்துவருகிறார்கள்  என அமைச்சர் கே. என்.நேரு பேசிய பேச்சு சர்சையை கிளப்பியுள்ளது.

'திசை காட்டும் திருச்சி' என்ற இணையவழி வேலைவாய்ப்பு முகாம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதனை துவக்கி வைத்து பேசிய  அமைச்சர் கே. என்.நேரு, லாலு பிரசாத் யாதவ், பீகார்காரர்களை ரயில்வே தேர்வில் காப்பி அடிக்க வைத்து பணியமர்த்தி வைத்துவிட்டார்.

அதனால்தான் ரயில்வே கேட்டில் வடமாநிலத்தவர்களே இருக்கிறார்கள் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 25ஆண்டுகளாக , 80லட்சம்பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள் என்றார்.