மிகப்பெரிய ஏக்கம் இன்றைய நிகழ்ச்சியின் மூலம் தீர்ந்தது....அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

மிகப்பெரிய ஏக்கம் இன்றைய நிகழ்ச்சியின் மூலம் தீர்ந்தது....அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

அரசு பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் படைப்பாளிகளாகவும் இலக்கியவாதிகளாகவும் வர வேண்டும் என்று விரும்புவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

இலக்கிய திருவிழா:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறார் இலக்கியத் திருவிழா என்ற மாநில அளவிலான பயிலரங்கை தொடங்கி  வைத்தார்.  கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தார். 

மிகப்பெரிய ஏக்கம்:

இலக்கிய விழாவை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்த இலக்கிய திருவிழா பெரிய  படைப்பாளிகள் இலக்கியவாதிகள் பங்கேற்கும் பொருநை இலக்கிய விழா, காவேரி சிறுவாணி, வைகை இலக்கிய விழா என்று ஆரம்பித்து வைத்தோம் எனவும் ஆனாலும் குழந்தைகளுக்கான இலக்கிய விழா ஒன்று இல்லை என்று மிகப்பெரிய ஏக்கம் இருந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூலம் தீர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

படிக்கலாம் வாங்க:

குழந்தைகள் தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவர கடந்த ஆண்டு படிக்கலாம் வாங்க என்று நிகழ்ச்சி முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்டது  எனவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு 157 மாணவர்கள் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியதோடு அவர்களுக்கு வாழ்த்துகளையும் கூறினார்.

முன் வருவதில்லை:

மேலும் 40 வருடங்களுக்கு முன்பாக குழந்தைகளுக்கான 50 இதழ்கள் வெளிவந்தாக கூறுகிறார்கள். எனத் தெரிவித்த அவர் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான படைப்பாற்றல் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதற்கு யாரும் முன் வருவதில்லை எனவும் கூறினார்.

குழந்தைகளின் படைப்பாற்றலை மற்றவருக்கு தெரியப்படுத்தும் விதமாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டது தான் தேன் சிட்டு ஊஞ்சல் என்ற இதழ்கள் எனவும் ஏறக்குறைய  70 ஆயிரம் பிரதிகள் மாதத்திற்கு வெளிவருகிறது எனவும் தெரிவித்தார்.

படிப்பைத் தாண்டி:

வகுப்பறையில் பெறக்கூடிய மதிப்பெண் மட்டுமே நம்மை மதிப்பீடு செய்யாது எனவும் நம்முடைய திறமை தான் வாழ்க்கைக்கான மதிப்பீடுகளை தரும் என்று நம்புபவர் முதலமைச்சர் எனக் கூறிய அமைச்சர் படிப்பை தாண்டி உங்களது திறமைகளை வெளி உணர வேண்டியது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமை எனவும் எதிர்காலத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எழுத்தாளராகவோ, படைப்பாளியாகவோ இலக்கியவாதிகளாவோ வர வேண்டும் என ஆசைப்படுவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க:   சிடிஎஸ் நிறுவன கட்டிடம்... லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்!!!