உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி :  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்பு !!

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட சைக்கிள் பேரணியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கலந்து கொண்டார்.

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி :  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்பு !!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில்   மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விழிப்புணர்வு  சைக்கிள் பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டார். 

இந்த சைக்கிள் பயணத்தில்  தமிழ்நாடு சுகாதாரதுறை செயலாளர் செந்தில்குமார்  மற்றும் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேர், கிண்டி சேர்ந்த பொறியியல் கல்வி மாணவர்கள் 50 க்கும் பேர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும், சைக்கிள் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும்  விழிப்புணர்வு வாசகங்களை முதுகில் ஏந்தியவாறு சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டனர்.  இந்த சைக்கிள் பயணம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைலிருந்து தொடங்கப்பட்டு, கடற்கரை சாலை வழியாக சாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வந்தடைந்து, மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவ மனையில் உள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம், மற்றும் மருத்துவ துறையில் உள்ள பல்வேறு இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.