தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட பவானிசாகர் அணை...!

பவானி ஆற்றின் மேல் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர், தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது.

தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட பவானிசாகர் அணை...!

75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மேல் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர், தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் அனைவரும்,  தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து மேல் மதகின் மேல் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மேல் மதகுகளில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் தேசியக்கொடி வண்ணத்தில் வெளியேற்றப்படும் காட்சி, காண்போர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.