10 -தே மாணவர்கள்..ஒரே டீச்சர்...நேரத்துக்கும் வரதில்லை..கொந்தளிக்கும் மக்கள்.. ஏன்?

திருத்தணி அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் உரிய நேரத்திற்கு வராததால், மாணவர்கள் ஆபத்தை உணராமல், இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ் விளையாடி வருகின்றனர். 

10 -தே மாணவர்கள்..ஒரே டீச்சர்...நேரத்துக்கும் வரதில்லை..கொந்தளிக்கும் மக்கள்.. ஏன்?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முத்துக் கொண்டாபுரம் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இந்த கிராமத்தை சேர்ந்த வெறும் 10 பிள்ளைகள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை.

இதனால் மாணவர்கள் தங்களுக்கு தாங்களே படித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் உள்ளனர். அத்துடன், பள்ளியின் அருகில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் தூண்கள் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

ஆபத்தை உணராத பள்ளி மாணவர்கள் தொட்டியின் கம்பி படிக்கட்டில் ஏறி, விளையாடி வருகின்றனர். எனவே, ஆசிரியர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவிதம் ஏற்படும் முன், நீர்நிலைத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.