வானிலை கணிப்பை மீறி கொட்டிய கனமழை... கவனமுடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

மழைக்கால வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்வதாக டிவிட்டரில் பதிவு

வானிலை கணிப்பை மீறி கொட்டிய கனமழை... கவனமுடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

மழைக்கால வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வானிலை கணிப்புகளையும் மீறி நேற்று பெருமழை கொட்டி தீர்த்ததாக குறிப்பிட்டார். 

எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக பதிவிட்டிருந்தார். கனமழை செய்தி அறிந்து,  திருச்சியில் இருந்து திரும்பிய தான், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு சென்றதாகவும், அங்கு எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதோடு,  நிலைமையை விரைந்து சீர்செய்யவும் அறிவுறுத்தியதாக பதிவிட்டிருந்தார்.  எனவே நிலைமை சீராகும் வரை, பொதுமக்கள்  கவனமுடன் தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும், மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்வதாக டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.