கொஞ்சம் உஷாரா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பாம்!!

ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொஞ்சம் உஷாரா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பாம்!!

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்த பிறகு, வளிமண்டல சுழற்சி, காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நேற்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.