ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0: தமிழக காவல்துறை சொல்வது என்ன?

ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0:  தமிழக காவல்துறை சொல்வது என்ன?

தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

”ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை”:

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. எனவே, போதைப்பழக்க நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர, கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ”ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை” என்ற பெயரில், கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டு வந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்த வேலை நிறுத்தப் போராட்டம்...முதலமைச்சர் பேசியது என்ன?

”ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0”:

அதன் பின்னர் ”ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற சோதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது. இந்த இரண்டு சோதனைகளின் முடிவுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் வங்கி கணக்குகளை தமிழக போலீசார் முடக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.