ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி நிலையம்.....!!!

ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி நிலையம்.....!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வேளாண் பட்ஜெட்டானது  திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும்.  சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.

ரூ. 4 கோடி நிதி: 

வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள்,  200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.

மின்னணு மாற்றத்தகு கிடங்கு: 

150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்படுத்தப்படவுள்ளது.

பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு:

பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மறுகட்டமைப்பு: 

27 சேமிப்புக் கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.  அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும்.

வாழை ஆராய்ச்சி நிலையம்: 

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைத்திட ரூ.15 கோடி ஒதுக்கீடு.

இதையும் படிக்க:    “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் நடிப்பில் மிரட்டிய விருமாண்டி அபிராமி.... கண்கலங்கிய படக்குழு!!