பாமகவை எச்சரித்த ஜெயக்குமாருக்கு...கே.பாலு தக்க பதிலடி!

பாமகவை எச்சரித்த ஜெயக்குமாருக்கு...கே.பாலு தக்க பதிலடி!
Published on
Updated on
1 min read

பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து பற்றி எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும் என்று பாமகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.

ஜெயக்குமாருக்கு பதிலடி தந்த கே.பாலு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் கே.பாலு, பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

1996ல் நான்கு எம்.எல்.ஏ.க்களுடன்  அதிமுக  பலவீனப்பட்டு இருந்த நிலையில், பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார் எனவும், அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள்கொடுத்துள்ளதாகவும், அதிமுகவின் வெற்றிக்கு பா.ம.க.தான் காரணம் என எப்போதும்  சொல்லிக்காட்டியதில்லை எனவும் கே.பாலு ஆவேசமாக தெரிவித்தார்.

ஜெயக்குமாரின் பேச்சு கண்டனத்துக்குரியது:

பாமக-விற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யார் என்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் கே. பாலு, நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி தான் விளக்க வேண்டும்:

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கருத்தை தான் ஜெயக்குமார் கூறினாரா? என்பதை எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கே.பாலு வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com