டெல்லியில் பலத்த மழையுடன் மோசமான வானிலை.. சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து!!

டெல்லி உள்பட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் பலத்த மழையுடன் மோசமான வானிலை.. சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து!!

டெல்லியில் பலத்த மழை பெய்து வருவதுடன் மோசமான வானிலை நிலவுகிறது.

இதன் காரணமாக சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு மாலை 3.10 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், மாலை 5.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், அதுப்போல் டெல்லியில் இருந்து மாலை 4 மணிக்கும் நள்ளிரவு 12.15 மணிக்கும்  வரவேண்டிய விமானம் என 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மேலும் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து ஆகியுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும், சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளனர்.