பேசு பொருளாகியுள்ள அண்ணாமலையின் அறிக்கை..! இதில் பெண்களை மதிக்கும் கட்சியாம்..! பாய்ந்து வந்த எதிர்க்கட்சிகள்

பேசு பொருளாகியுள்ள அண்ணாமலையின் அறிக்கை..! இதில் பெண்களை மதிக்கும் கட்சியாம்..! பாய்ந்து வந்த எதிர்க்கட்சிகள்

திருச்சி சூர்யாவை பாஜகவில் இருந்து நீக்குவாதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சூர்யா - டெய்சி:

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா இருவருக்கும் நடந்த உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில், இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாகவும், இருவரும் சகோதரத்துவத்துடன் இருக்கப்போவதாகவும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

Chaos in Kamalalayam: Inside the convo of Daisy Saran-Surya Siva

இடையில் சிக்கிய காயத்ரி:

இந்த ஆடியோவை எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பாஜகவை சேர்ந்த நிர்வாகியாக முதலில் பகிர்ந்தது காயத்ரி ரகுராம் தான். அவர் பகிர்ந்த பின்பு தான் இந்த ஆடியோ சர்ச்சை மிக பெரிதாக பேசப்பட்டது. அவர் அந்த ஆடியோவை பகிர்ந்து டெய்சிக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இது தான் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யவும் காரணமாக அமைந்தது. தற்போது டெய்சியில் சூர்யாவும் சமாதானம் ஆகிவிட்ட நிலையில் காயத்ரி ரகுராம் தான் கட்சி நிர்வாகிகளுக்கு எதிரியாகிவிட்டார் என பேசப்படுகிறது.

இதையும் படிக்க: காயத்ரிக்கு ஆதரவாக வந்த கஸ்தூரி..! மானம் கெட்ட பிழைப்பு என ஆவேசம்..!

காயத்ரி இடைநீக்க அறிக்கை:

காயத்ரியை இடைநீக்கம் செய்யும் போது பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு நீக்கப்படுகிறார். மாத காலத்திற்கு ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது எனக் கூறிப்பிடப்பட்டிருந்தது.

சமாதானமாக போன டெய்சி சரண்-திருச்சி சூர்யா... ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன  காயத்திரி ரகுராம்!!

சூர்யா இடைநீக்க அறிக்கை:

சூர்யாவை இடைநீக்கம் செய்யும் போது பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது குறித்தும், பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்சி உள்ளேயே சுற்றிய

இதைத் தொடரலாம்:

மேலும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். ஈடுபட்டுள்ளதை அவர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேறுபாடு

செஞ்சது தவறாம்; தண்டனைகள் வெவ்வேறானவையாம்:

காயத்ரி நீக்கம் பற்றிய அறிக்கையில், காயத்ரியுடன் யாரும் தொடர்பில் இருக்க கூடாது எனக் கூறியுள்ள அண்ணாமலை, சூர்யா அறிக்கையில் கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். ஈடுபட்டுள்ளதை அவர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

சூர்யாவிற்கு மட்டும் என்ன சலுகை இது. அவருக்கு மட்டும் என்ன வாய்ப்பு இது என நெட்டிசன்களும் திமுகவினரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் நிர்வாகி திவ்யா இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில், செஞ்சது தவறாம். ஆனால் தண்டனைகள் வெவ்வேறானவையாம். ஆனா மகளிரை போற்றும் கட்சினு பேரு வேற, என விமர்சனம் செய்துள்ளார்.