தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு...

தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் என்று பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு...
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என்று குற்றம்சாட்டிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை பயன்படுத்தியது மற்றும் வீணடித்தது என்பது தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
 
இன்று சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கோவில்கள் வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வடபழனி முருகன் கோவிலில் பாஜக தலைவர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்து அவர்களை சந்தித்த அவர்,
 
மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசை எவ்வளவு பயன்படுத்தியது மேலும் எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியும், பற்றாக்குறைக்கு காரணம் திமுகதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
தொடர்ந்து பேசியபோது, நாங்கள் தேர்தல் செலவுக்கு 4 கோடி கொடுத்தால் தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும் என்றும், கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை என்றார். அதேபோல் எச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை உட்கட்சி விவகாரம் தான் என்றும் கூறினார்.
 
மேலும் நேற்று புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது ஒன்றிய அரசு என்ற பயன்படுத்துவது குறித்து பின்னர் பேசுகிறேன் எனக் கூறியும், கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் கூறினர்.