இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் பாஜக பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணைத்தலைவர் விபி துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். அதிமுக சார்பில் எஸ். பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத் தலைவர் வி பி துரைசாமி தலைவராக பொறுப்பேற்று உள்ள அண்ணாமலை மரியாதை நிமித்தமாக கூட்டணி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது இவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்றார்.