நாக்கு வெட்டப்படும்...பகிரங்கமாக பேசிய பா.ஜ.க. பிரமுகர்...வழக்குபதிவு செய்த போலீசார்!

நாக்கு வெட்டப்படும்...பகிரங்கமாக பேசிய பா.ஜ.க. பிரமுகர்...வழக்குபதிவு செய்த போலீசார்!

இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என பேசிய மதுரை பாஜக மாவட்ட தலைவர் மீது சிலைமான் காவல்துறையினர் 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லை பகுதியில் கடந்த 7ஆம் தேதியன்று வேலம்மாள் மருத்துவமனை அருகே கல்லம்பல் மாமுனி வில்வநாதர் ஆலயத்தில் மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேகாலயா ஆளுநர் இல கணேசன் அவர்கள் நலம் பெற வேண்டி நடந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றோர்கள் கைலாச நாடு தொடங்கிய நித்தியானந்தாவை போல அவர்களும் ஒரு நாட்டை தொடங்கி இந்த கருத்துக்களை சொன்னால் நல்லது.

இதையும் படிக்க: எல்லாரும் ஊருக்கு கிளம்ப தயாரா? விட்டாச்சு ஸ்பெஷல் பஸ்!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் எனவும், இந்து சமயத்தையும் இந்து கடவுளின் மீதும் சுயலாபத்திற்காக அரசியல் விளம்பரத்திற்காக பேசுபவர்கள் உடலில் நாக்கு இருக்காது வெட்டப்படும் என்று பேசியது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், இது தொடர்பாக சிலைமான் காவல்துறையினர் தானாக முன்வந்து 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில், அவதூறாக பேசும் ,கொலை மிரட்டல் ஆகிய 6பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.