தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நாளை ஆர்பாட்டம்...

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் நாளை ஆர்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.      

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நாளை ஆர்பாட்டம்...

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 அதேசமயம் பாதிப்பு குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என, முதல்வர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக கட்சி சார்பில் கண்டனம் ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள எல்.முருகன், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என பதிவிட்டுள்ளார்.