அணிலை மீட்டு தரவேண்டும்... காஞ்சிபுரத்தில் பாஜகவினர் மனு...

மின் தடைக்கு காரணமான அணிலை, தமிழக அரசு பத்திரமாக மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் பா.ஜ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அணிலை மீட்டு தரவேண்டும்... காஞ்சிபுரத்தில் பாஜகவினர் மனு...
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்தடைக்கு அணில் ஒரு காரணம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் மின்தடைக்கு அணில் ஒரு காரணம் என கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு அணிலை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.