"பாஜக விரட்டியடிக்கப்பட வேண்டிய சக்தி" - கே.பாலகிருஷ்ணன் அறிக்கை!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல்  ஒட்டுமொத்த நாட்டுக்கே விரோதமான பா.ஜ.க விரட்டியடிக்க வேண்டிய சக்தி என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதுகலை மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் பூஜ்யம்  மதிப்பெண்  பெற்றாலே போதும் என விநோதமான முடிவை எடுத்துள்ளதன் மூலம் நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த தொடர்புமில்லை என  மீண்டும் அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் படிக்க : கனடா நாட்டினருக்கான விசாவிற்கு தடை - மத்திய அரசு அதிரடி

நீட் திணிப்பின் ஒரே நோக்கம், நாடு முழுவதும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் கொள்ளைக்கு வழிவகுப்பதுதான் என்று கூறியவர், அப்பட்டமாக இதைச் செய்கிற பாஜக தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்குமே விரோதமான, விரட்டியடிக்க வேண்டிய சக்தியாகும் என்று குறிப்பிட்டார்.