பதவியை ராஜினாமா செய்த பாஜக மாவட்ட தலைவர்..காரணம் என்ன? நள்ளிரவில் நிதியமைச்சருடன் சந்திப்பு.!

பாஜகவில் இருந்து விலகிய மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் திமுகவில் இணைய வாய்ப்பு..!

பதவியை ராஜினாமா செய்த பாஜக மாவட்ட தலைவர்..காரணம் என்ன? நள்ளிரவில் நிதியமைச்சருடன் சந்திப்பு.!

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர்  மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அதிரடியாக அறிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்துக்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு நள்ளிரவில் நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை என்றும் இன்று காலை தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், கடந்த ஆண்டு தான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டு வந்த அவர், தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், மீண்டும் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.