”எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது" - அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். 

இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இன்னும் எத்தனை ஐடி ரெய்டுகள் நடந்தாலும் சரி, எத்தனை குட்டிகரணங்கள் அடித்தாலும் சரி ஒருபோதும் பாஜக ஆட்சி அமைக்காது எனவும், ஸ்டாலின் தலைமையில் தான் எப்போதுமே ஆட்சி அமையும் என்றும், இன்னும் கால் நூற்றாண்டுகளுக்கு திமுகவை அசைக்க முடியாது என்றும் கூறினார். 

இதையும் படிக்க : கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...!

அத்துடன், அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை கைப்பற்றுகிற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்க மாட்டார்கள் என்றும் காட்டத்துடன் கூறினார்.