பாஜகவால் எதுவும் செய்ய முடியாது - தயாநிதி மாறன் ஆவேச பேச்சு !!!

பாஜகவால் எதுவும் செய்ய முடியாது - தயாநிதி மாறன் ஆவேச பேச்சு !!!

திராவிட மாடல் ஆட்சி 2 ஆண்டு சாதனை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாகச் சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் வெப்பேரியில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, "இந்தியாவில் பிற மாநிலங்களுக்குக் கிடைக்காத பெருமை நமது தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. அதன் காரணமாகவே 

ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து | Tamil  News MK Stalin first signature Rs 4000 provide project

இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சாராக நமது முதலமைச்சரை இந்தியாடுடே பத்திரிக்கை தேர்வு செய்து வெளியிட்டது

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உட்பட பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்சர்தான் கொண்டுவந்தார். செப்டம்பர் 15 குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க உள்ளோம். அதேபோல் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்குவதும் நமது ஆட்சிதான்.

மேலும் படிக்க | நந்தினிக்கு உறுதி கொடுத்த முதலமைச்சர் - உயர்கல்விக்கு அனைத்து உதவிகளையும் அரசே

இணையம் வழியே மத்திய அரசின் சாதனைகளைச் சொல்லும் தமிழக பாஜக!- தேர்தல்  பிரச்சாரத்தையும் முன்னெடுக்கத் திட்டம் | Tamilnadu BJP in online campaign -  hindutamil.in

தொலைக்காட்சி முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை தி.மு.க ஆட்சியில் இலவசமாக கொடுத்துத்தான் தி.மு.க முன்னேறாமல் உள்ளது என்று பிரதமர் கூறுகிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம் என்று கூறினார்கள். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது. இருந்தும் இருந்தும் இந்தியாவில் ஒரு நதிகள் கூட இணைக்கப்படவில்லை.பா.ஜ.க-வை பொறுத்தவரையில் தேர்தலுக்குத் தேர்தல் தங்களது நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

பத்திரிகையாளர் சந்திப்புப் பேச்சால் சர்ச்சை: தயாநிதி மாறன் வருத்தம் | dayanidhi  maran tweet - hindutamil.in


தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதற்குப் பதில் ஆர்.எஸ்.எஸ் ரவி என்ற பெயர்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் போல் செய்தியாளர்களைச் சந்தித்து திராவிடம் விழுந்துவிட்டது என்றும் சட்டம் சீர் கெட்டு விட்டது என்று கூறுகிறார். ஆனால் பா.ஜ.க ஆட்சி செய்யும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. முதலில் பிரதமரை அதை அணைக்கச் சொல்லுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிற தமிழ்நாட்டு மண்ணில் பா.ஜ.க-வால் ஒரு போதும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது" என தெரிவித்துள்ளார்.